இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், மூன்று இடங்களைத் தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்கிறார் கம்மன்பில.
சுதுவெல்ல, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் கடற்படையினர் மத்தியில் மாத்திரமே தொற்றிருப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், மக்கள் எண்ணிக்கை குறித்து அச்சப்படத் தேவையில்லையென அவர் தெரிவிக்கிறார்.
இன்றயை அளவில் இலங்கையில் 592 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 50 வீதம் கடந்த மூன்று முதல் நான்கு தினங்களுக்குள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment