புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமையப்பெற்றிருந்த தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து இங்கு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஏலவே ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு பேர் கடந்த வாரம் முழுமையாக குணமடைந்திருந்த நிலையில் தற்போது புத்தளம் சாஹிராவில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளதாக உதவி அதிபர் எம். முஹ்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
Photos thanks to: Mr. M. Muhsi
Photos thanks to: Mr. M. Muhsi
No comments:
Post a Comment