நியுசிலாந்தில் கொரோனா தொற்று முற்றாகத் தடுக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஜசின்டா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நியுசிலாந்தில் கொரோனா தொற்றாளர்கள் வெகுவாக குறைந்துள்ளதுடன் ஞாயிறு தினம் ஒருவரே கண்டறியப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அங்கு வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment