இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் பொது மக்களிடையே கொரோனா பரவல் இல்லையென்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் ஒன்றில் முகாம்களில் இருந்தோர் அல்லது பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த இடங்களிலிருந்தே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலதிகமாக விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டை உடனடியாக வழமை நிலைக்குக் கொண்டு வர முடியும் எனவும் பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டுத் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment