புதுக்கடையில் வீடுகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 April 2020

புதுக்கடையில் வீடுகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: அசாத் சாலி!

https://www.photojoiner.net/image/0YX0S8Kg

கொரோனா தொற்றின் பின்னணியில் புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தை பிரதேசத்தில் பெருந்தொகையான மக்கள் தமது வீடுகளைக் கைவிட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இம்மக்களின் வீடுகள், உடைமைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாட்டினை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள அதேவேளை, இவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறு பகுதிகளிலிருந்து வந்து திருடர்கள் நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளும் சாத்தியமிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment