முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்வதற்கான புலனாய்வுத் துறையினர் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் தனது கைதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.
வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமையினைக் காரணங் காட்டியே இவ்வாறு கைது செய்ய முயற்சிப்பதாக அவரது தரப்பு விளக்கமளித்துள்ள அதேவேளை அதேவேளை அதனை அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரம் என சிங்கள மொழி ஊடகங்கள் விளக்கி வருகின்றன.
இந்நிலையையிலேயே, இன்று அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள ரிசாத் பதியுதீன், தனது கைதைத் தடுக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment