பிலியந்தலயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அறியப்பட்டிருந்த மீன் வியாபாரியோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கருதப்படும் பிலியந்தல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை தனிமைப்பட உத்தரவிட்டுள்ளனர் சுகாதார அதிகாரிகள்.
ஊரடங்கு நேரத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கியவர், பரிசோதித்தவர் உட்பட்ட மூவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் அத்துருகிரிய, பதுளை மற்றும் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு வீடுகளிலேயே தனிமைப்பட உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment