அமெரிக்கா: கொரோனா தொற்று ஒரு மில்லியனைத் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 April 2020

அமெரிக்கா: கொரோனா தொற்று ஒரு மில்லியனைத் தாண்டியது!


கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம், அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது.



இச்செய்தி பிரசுரிக்கப்படும் நேரத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035,765 என்பதோடு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,266 என பதிவாகியுள்ளது.

இதேவேளை, அங்கு 142,238 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில், இத்தாலியில் 27,359 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment