கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த பிரமுகர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்ததன் பின்னணியில் இம்ரான் கானுக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதிக்கு உதவும் முகமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வழங்குவதற்காக குறித்த நபர் பிரதமரை கடந்த 15ம் திகதி சந்தித்துள்ளார். அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதன் பின்னணியேலே இம்ரான் கானுக்கு பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் முடிவில் பாக் பிரதமருக்கு கொரோனா தொற்றில்லையென கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment