புதுக்கடை, பண்டாரநாயக்க மவாத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் மார்ச் மாதம் 12ம் திகதி தம்பதிவ யாத்திரை சென்று திரும்பியிருந்த நிலையில் ஒரு மாதம் கழித்து அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவரது குடும்பத்தார் மற்றும் அண்டை வீடுகளில் வாழ்ந்தோரில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து பாதுகாப்பு காரணமாக அப்பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு கொரோனா தொற்றைக் கொண்டு வந்தது யார்? என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக மத்திய கொழும்பு சுகாதார அதிகாரி W. சந்திரபாலவை ஆதாரங்காட்டி தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இறுதியாக சலூன் ஒன்றை நடாத்தி வந்தவரால் சுமார் 25 பேருக்கு கொரோனா பரவியதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இப்பகுதியின் மூல காரணத்தை மறைப்பதற்கான முயற்சிகள் பரவலாக சிங்கள ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment