கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி உதவி செய்யப்போவதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று பரபரப்பாக வெளியிட்டு வந்த செய்தி ஒரு வதந்தியென அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது.
இச்செய்தி பிரசுரமாகும் நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று 20 ஆயிரத்தை அண்மித்துள்ள அதேவேளை 640 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, கொரோனா கட்டுப்பாடு பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டு வருகின்றன.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பூட்டான் போன்ற நாடுகளுக்கு இந்தியா கொரோனா உதவிக்காக இராணுவத்தை அனுப்பவுள்ளதாக காலையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment