முகமூடிக்குள் 150,000 ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்ட சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
தனது இராணுவ அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்நபர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை, போம்புவல பகுதியில் இவ்வாறு ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து போதைப்பொருள் விநியோகம் செய்வதாக கிடைத்திருந்த தகவலின் பின்னிணியில் விசாரணைகள் நடாத்தப்பட்டதாக பொலிசார் தெரவிக்கின்றனர்.
No comments:
Post a Comment