கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுதராதர சதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அனுராதபுர மாவட்டம் கெபிதிகொள்ளாவ கல்வி வலயத்தில் உள்ள மூன்று முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முஹம்மது நியாஸ் பாத்திமா சாஹிரா என்ற மாணவி 9 பாடங்களிலும் A சித்திகளை பெற்று பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 9A சித்திகளை பெற்றுக்கொண்ட மாணவியாக சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.பி பரீட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்பாடசாலையில் கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 38 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு இதில் 20 மாணவர்கள் உயர் தர கல்வியை தொடர தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
-முஹம்மட் ஹாசில்
No comments:
Post a Comment