யாழ் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சகோதரர் வபாத்! - sonakar.com

Post Top Ad

Thursday, 23 April 2020

யாழ் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சகோதரர் வபாத்!

MamXVfg

கொழும்பு, புதுக்கடை பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக யாழ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 62 வயது முஹம்மத் நசார் எனும் சகோதரர் மாரடைப்பால் அங்கு உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



அண்மையில் கொரோனா தொற்றின் பின்னணியில் பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருந்தன. இதில் ஒருவராகவே குறித்த சகோதரர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலதிக பரிசோதனைகளை விரைவாக முடித்து நாளைய தினம் ஜனாஸாவைப் பெறுவதற்கான முயற்சி இடம்பெறுவதோடு சுகாதார அமைச்சர் பவித்ராவின் உதவியும் நாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment