நேற்றைய தினம் இலங்கையில் ஒரே நாளில் அதிக தொற்றுக்குள்ளானோர் பதிவாகியுள்ள நிலையில் அதில் 61 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருவர் கொழும்பு 5, தாபரே மாவத்தையிலிருந்து கண்டறியப்பட்டுள்ள அதேவேளை டொரிங்டன் பகுதியின் 60ம் இலக்க தோட்டத்திலிருந்து ஒருவரும் கொழும்பு மாநகர சபை சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருமாக மொத்தம் நான்கு சிவிலியன்களுக்கும் தொற்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டொரிங்டன் பகுதியில் கண்டறியப்பட்டவர் ஏலவே பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து வந்திருந்தவர் எனவும், அது பகுதியைச் சேர்ந்த சாரதியோடு இணைந்து பணியாற்றிய மாநகர சபை ஊழியரே தொற்றுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment