ஜா-எல சுதுவெல்லயில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து உலவித் திரிந்த 28 நபர்களைத் தேடும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வந்த கடற்படையினரில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் கண்டறியப்பட்ட 63ல் 53 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் நாவலபிட்டிக்கு விடுமுறையில் சென்றுள்ள அதேவேளை ஹம்பாந்தோட்டை, பதுளை உட்பட பல இடங்களுக்கு வெலிசர முகாமிலிருந்து விடுமுறைக்காக சென்றிருந்த கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் குடும்பத்தவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மேலதிக பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment