வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய ஒருவர் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டதையடுத்து வெலிசர குறித்த முகாமில் மேலதிக பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், அங்கு 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏலவே, முதலில் தொற்றுக்குள்ளானவர் தொடர்பு பட்ட 12 கிராமங்கள் பொலன்நறுவயில் முடக்கப்பட்டிருந்ததோடு அநுராதபுர டிப்போவிலும் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் முகாமில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment