கொழும்பு, புறக்கோட்டை மெனிங் பொதுச் சந்தையை 29ம் திகதி முதல் திறப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
எனினும், கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு அங்கு வரும் பொது மக்கள் மற்றும் வாகனங்களின் தொகையைக் குறைப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.
இங்கு செல்பவர்கள் முக மூடி அணிந்து செல்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment