கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
எனினும், மே 1ம் திகதி வரை இரவு 8 மணி முதல் - காலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையிலேயே வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு மாவட்டங்களுக்கு மே 4ம் திகதி வரை ஏலவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment