நேற்றைய தொற்றாளர்களுள் 20 பேர் கடற்படையினர் - sonakar.com

Post Top Ad

Sunday, 26 April 2020

நேற்றைய தொற்றாளர்களுள் 20 பேர் கடற்படையினர்


நேற்றைய தினம் (25) கண்டறியப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர்களுள் 20 பேர் கடற்படையினர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் இருந்த 10 பேரும் விடுமுறையில் சென்றிருந்த 10 பேரும் இதில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை கடற்படை வீரர் ஒருவர் மணமுடித்திரு பெண் இராணுவ அதிகாரியொருவர் மற்றும் குடும்பத்தினர் மூவருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இத்துடன், அண்மையில் ஒமானிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கும், அதேபோன்று மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் மக்கள் பாதுகாப்புக்காக கடற்படையினரே முன்னரங்கில் நின்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment