கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் செப்டம்பர் 1ம் திகதி தமது நாட்டுக்கான அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான சேவைகளையும் இரத்துச் செய்துள்ளது ஆர்ஜன்டினா.
மார்ச் மாதமே எல்லைகளை மூடிய ஆர்ஜன்டினா, கொரோனா கட்டுப்பாடு விடயத்தில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பின்னணியில் செப்டம்பர் வரை விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 4000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 192 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment