இதுவரை 180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து உலவித் திரிந்த 28 பேரைத் தேடி கடற்படையினர் முன்னரங்க சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு குறித்த நபர்களைக் கைது செய்து முகாமுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அத்துடன் அங்கிருந்து தொட்டலங்க வரை மேலதிக தேடல் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ஒரு கடற்படை சிப்பாய் கண்டறியப்பட்டதையடுத்து, தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் இவ்வாறு 180 கடற்படையினர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்துக்கு அதிகமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment