இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 322வதாக அடையாளங் காணப்பட்ட நபர் பொலன்நறுவயைச் சேர்ந்தவர் என்ற பின்னணியில் அங்கு 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பொலன்நறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்ட குறித்த நபர் வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு தினங்களுக்கு முன்பாகவே விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்த நிலையில் குறித்த நபர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை ஜா-எல சுதுவெல்ல பகுதியில் மேலும் ஒருவர் கண்டறிய்ப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 323ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment