இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. நேற்றைய தினம் மாத்திரம் 63 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை சுகாதார அமைச்சு, சடலங்களைப் போர்வையிடும் ஆயிரம் பைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்திருந்ததாக வெளியான தகவல் தொடர்பில் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சின் கூடுதல் செயலாளர் மருத்துவர் சுனில் டி அல்விஸ் விளக்கமளித்துள்ளார்.
அவருடைய விளக்கத்தின்படி, குறித்த அளவு பைகளை இலங்கைக்குத் தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டது உண்மை, ஆனாலும் அவை கொரோனா உயிரிழப்புகளுக்காகவன்றி, இச்சூழ்நிலையில் ஏனைய, அடையாளந் தெரியாத நோய்களினால் உயிரிழக்கும் உடலங்களைப் போர்வையிடுவதற்காக என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 1000 பைகளைப் பெற முயற்சித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலத்த சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இவ்வாற விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment