
சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள குவைத்தில் வீடுகளிலேயே தொழுமாறு அதானில் தெரிவிக்கப்படுகிறது.
வழமையான அதானுக்கு பதிலாக அஸ்ஸலாத்து பீ புயிதுக்கும் (வீடுகளிலேயே தொழுங்கள்) என்ற அறிவிப்பு ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளில் முடங்கி வருகின்ற நிலையில் அமெரிக்கா தற்போது அங்கு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment