![](https://i.imgur.com/BrD2XMb.png?1)
இலங்கைக்குள் நுழைவதற்கு விமான நிலையத்தில் வருகை தந்ததும் விசா பெற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறையை இரத்துச் செய்துள்ளது அரசாங்கம்.
கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்டிருந்த சுற்றுலாத்துறை சரிவை சீர் செய்யும் நிமித்தம் இவ்வாறு இலவச விசா வழங்கல் நடைமுறை அமுலுக்கு வந்திருந்ததுடன் அதனை விமான நிலையத்திலும் பெறக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், தற்போது கொரோனா சூழ்நிலையில் முன் கூட்டியே விசா பெற்றே நாட்டுக்குள் நுழைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment