![](https://i.imgur.com/jrLbP3Y.png?1)
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது குவைத்.
ஏலவே 13ம் திகதியுடன் முடிவுறும் வகையிலா ஒரு வாரம் விமானப் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை குவைத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து பயணிக்கும் அனைத்து விமான சேவைகளையும் இரத்துச் செய்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 70க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு மேலும் வைரஸ் பரவுவதை தடுக்குமுகமாக உணவகங்களில் மற்றும் பொது இடங்களில் கூடுவதையும் தடை செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment