கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி வைக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 March 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி வைக்க முஸ்தீபு


யாழ் சர்வதேச விமான நிலையம் இரு வாரங்கள் ஏலவே மூடப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிலவரத்தின் பின்னணியில் கட்டுநாயக்க விமான நிலையத்தையும் தற்காலிகமாக மூடி வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


ஏலவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கனடா மற்றும் கட்டார், பஹ்ரைனிலிருந்தும் விமானங்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தைத் தற்காலிகமாக மூடி வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment