முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்நறுவயில் போட்டியிடப் போவதாக தெரிவித்து வரும் நிலையில், அவர் போட்டியிடுவதைத் தடுப்பதற்கு மஹிந்தவின் உதவி நாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரே இவ்வாறு மஹிந்த ஊடாக மைத்ரியை சமாதானப்படுத்தி அதற்குப் பகரமாக அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தை வழங்க வழி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் கருத்துக்கள் கட்சியைப் பாதிப்பதாகவும் அதனால் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நியமனத்தை வழங்கி போட்டியிடுவதைத் தடுப்பதே சிறந்ததெனவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment