![](https://i.imgur.com/fk3G2vV.png?1)
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவியுள்ள நிலையில் இலங்கையர்கள் வெளிநாட்டு பிரயாணங்களை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுரை வழங்கியுள்ளது.
ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்ற அதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு வீடுகளிலேயே தங்குமாறும் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு, அஸ்துமா போன்ற பாதிப்புள்ளவர்கள் இலகுவாக குறித்த வைரஸ் தாக்குதலுக்குள்ளாவதாக உலகளாவிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொது இடங்களில் கூடுவது மற்றும் வெளிநாட்டுப் பிரயாணங்களை முடிந்த வரை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment