கோட்டாபே ராஜபக்ச, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப நடந்து கொள்ளவில்லையென விசனம் வெளியிட்டு வரும் அத்துராலிரேய ரதன தேரர், தாம் தனிக்கட்சி ஆரம்பித்து அதனூடாக தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார்.
மதரசாக்களை மூடி, முஸ்லிம்களின் அடிப்படைவாத செயற்பாடுகளை முடக்கப் போவதாக வாக்குறுதியளித்த அவர் தற்போது முதுகெலும்பில்லாத வகையில் செயற்படுவதாகவும் நாமல் பேபியின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்ட மஹிந்தவின் அரசியல் நகர்வுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கும் அவர், பிக்குகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் சட்டம் கொண்டு வர முடியாது எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், அபே ஜனபல என்ற கட்சிப் பெயரில் தாம் போட்டியிடப் போவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment