முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் தனியார் கல்வி நிலையத்தினை கொரோனா வைரஸ் கண்காணிப்பு சிகிச்சை மையமாக அரசு அறிவித்துள்ள நிலையில் தமது நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
ஆயிரக்கணக்கில் வந்திறங்கிய இராணுவத்தினர் எவ்வித அனுமதியும், கலந்துரையாடலும் இன்றி இவ்வாறு அபகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம் கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment