கொரோனா வைரஸ் சர்ச்சை பெருகி வரும் நிலையில் இதனைக் காரணங்காட்டி தேர்தலைப் பின் போடும் எண்ணம் எதுவுமில்லையென்கிறது தேர்தல் ஆணைக்குழு.
இலங்கைக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன் இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து வருவோர் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டில் சுற்றுலாப் பயண வழிகாட்டி ஒருவர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாரிய அளவில் வைரஸ் தாக்கமில்லையென தெரிவிக்கப்படுகிறது. எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பிரஜைகள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment