![](https://i.imgur.com/bEnWYwO.png?1)
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிச் சின்னம் தொடர்பிலான அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிறு தினமும் எவ்வித தீர்மானமுமின்றி முடிவுற்றுள்ளது.
அன்னம் மற்றும் தொலைபேசி சின்னங்களும் ஆராயப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் யானைச் சின்னத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், யானைச் சின்னத்தில் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கமைய ரஞ்சித் மத்தும பண்டாரவை செயலாளராக்குவதில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் செயற்குழு மீண்டும் கூடிக் கலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment