மஹிந்த ராஜபக்ச எப்போதும் தோற்கடிக்க முடியாதவர் என்ற நம்பிக்கை தகர்க்கக்கூடியது என்பதை 2015ல் நிரூபித்தது போன்று மீண்டும் நிரூபிக்கப் போவதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியானது எதிர்க்கட்சியில் அமர்வதற்காக உருவாக்கப்படவில்லையெனவும் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பறவே உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கோட்டாபே ராஜபக்ச அடுக்கடுக்காக சொன்ன வாக்குறுதிகள் அவருக்கே மறந்து போயுள்ள நிலையில் மக்கள் புத்தி சாதுர்யமான முடிவொன்றை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment