
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவுடன் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி கூட்டணியமைத்துள்ளது.
இது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்த தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, தமது கட்சி சஜித் பிரேமதாச கூட்டணியின் வெற்றிக்காக கூட்டிணைந்து செயற்படவுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தின் பிரச்சார நடவடிக்கைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இப்பின்னணியில் சஜித் அணியின் தேசியப்பட்டியலூடாக கட்சித் தலைவர் அசாத் சாலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைந்து தனித்துப் போட்டியிடுவதற்கு அண்மைக்காலமாக அசாத் சாலி அழைப்பு விடுத்து வந்த போதிலும், அதற்கு சாதகமாக பதிலெதுவும் கிடைக்காத நிலையில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment