பொது பல சேனா அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியதாக அண்மையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருந்தமையை கடுமையாக எதிர்க்கும் பொது பல சேனா, அவரை நேருக்கு நேர் விவாதத்துக்கு வருமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் என்றால் என்ன? அப்படியொன்று இலங்கையில் இருப்பதற்கான ஆதாரம் என்ன? நேர்வேயிடம் பணம் பெற்று பௌத்த அடிப்படைவாதம் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் என்ன? போன்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து விஜேதாசவுக்கு கடிதம் ஒன்றையும் அவ்வமைப்பு அனுப்பி வைத்துள்ளது.
தான் நீதியமைச்சராக இருந்த போது திரட்டப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலேயே பொது பல சேனா - நோர்வே உறவு பற்றி குறிப்பிடுவதாக விஜேதாச முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி: https://www.sonakar.com/2020/02/blog-post_601.html
தொடர்புபட்ட செய்தி: https://www.sonakar.com/2020/02/blog-post_601.html
No comments:
Post a Comment