![](https://i.imgur.com/BAfHJIa.jpg?1)
புதிய லங்கா சுதந்திரக் கட்சி எனும் பெயரில் தனது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் குமார வெல்கம.
2015ம் ஆண்டோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திசை மாறிப் போய் விட்டதாகவும் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை நிலைப்படுத்த இந்தப் புதிய பயணம் தேவைப்படுவதாகவும் விளக்கமளித்துள்ள அவர் இந்நடவடிக்கைக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் முழு ஆசீர்வாதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது பலமானது போன்று காட்சியளித்தாலும் விரைவில் நிலைமை சமப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment