பொதுஜன பெரமுனவுடனான 'பௌத்த' உறவில் அதிருப்தியடைந்துள்ள நிலையில் தனிக்கட்சி ஊடாகப் போட்டியிடப் போவதாக அண்மையில் தெரிவித்திருந்த அத்துராலியே ரதன தேரர் பொது பல சேனாவின் ஞானசாரவையும் தனது அணியில் இணைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீல சுதந்திரக்கட்சியூடாக நியமனம் கிடைக்காதவர்கள், கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த புத்திஜீவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக தனது கட்சிக்கான வேட்பாளர்களை ரதன தேரர் தயார் படுத்தியுள்ளதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு கட்சியூடாக 16 வருடங்கள் நாடாளுமன்றில் இடம் பிடித்திருந்த ரதன தேரர், பௌத்த பிக்குகள் நாடாளுமன்றம் செல்வதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment