ஐக்கிய தேசியக் கட்சியின் தந்தை போன்று அக்கட்சியைப் பாதுகாத்து வரும் ரணில் விக்கிரமசிங்கவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி சஜித் பிரேமதாச அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதாக தெரிவிக்கிறார் பெரமுனவின் பொலன்நறுவ நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க.
தமது மாவட்டத்தில் மைத்ரி பூச்சியம் எனவும் தாமே பெரமுனவின் தலைவர் எனவும் தெரிவித்து வரும் அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் ரணிலின் நிலை பரிதாபமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
அத்துடன், ரணில் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியால் 40 ஆசனங்களைக் கூட வெல்ல முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment