கொரோனா பரவலின் அடிப்படையில் இலங்கையர் தமது நாட்டுக்குள் வர தற்காலிக தடை விதித்துள்ளது கட்டார்.
இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள இத்தடையினால் இலங்கை, சீனா, எகிப்து, ஈரான், தென் கொரியா உட்பட 13 நாடுகளின் பிரஜைகளுக்கு கட்டாருக்குள் செல்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் கொரோனா 'முன்னெச்சரிக்கை' நடவடிக்கைகள் மாத்திரமே எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகளவு தாக்கம் இல்லையெனவும் அரசு தெரிவித்து வருகின்ற போதிலும் குவைத், சவுதி, கட்டார் போன்ற நாடுகள் தமது பட்டியலில் இலங்கையையும் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment