முஸ்லிம் அரசியல் தலைமைகள் இம்முறை தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட்டு 'பேரம்' பேசும் சக்தியாக உருவாக வேண்டும் என தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.
அனைத்து கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாராகி வரும் நிலையில், முஸ்லிம் கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதை விடுத்து ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் தேசிய ஐக்கிய முன்னணி இதற்கான முன்மொழிவை அனைத்து கட்சிகளிடமும் தெரிவித்துள்ள போதிலும் சாதகமாக பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மை சாத்தியமில்லையெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்தால் பலமான ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கலாம் எனவும் தேர்தல் தொடர்பில் சோனகர்.கொம் வினவிய போது அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment