![dVee6Km](https://i.imgur.com/dVee6Km.png?1)
மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைதான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவ்வழக்கில் 32 பேர் சந்தேக நபர்களாக இணைக்கப்பட்டுக் கைதாகியுள்ளனர். இந்நிலையில், குறித்த நபர்களின் விளக்கமறியல் மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2018 டிசம்பர் காலப்பகுதியில் மாவனல்லையில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டதன் பின்னணியில் படிப்படியாக இந்நபர்கள் கைதாகியிருந்தமையும் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர்கள் இருவர் ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment