![](https://i.imgur.com/9xQ4NR8.png?1)
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மத்திய வங்கி பிணை முறி ஊழலுடன் தொடர்புடைய 10 பேருக்கு எதிராக வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவி கருணாநாயக்கவின் கைது தொடர்பில் நாளை மறுதினம் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார் கோட்டை மஜிஸ்திரேட்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் தன்னைக் கைது செய்ய நடவடிக்கையெடுப்பது நாடகம் எனவும் குற்றச்சாட்டு வெளியானவுடனேயே நீதியான விசாரணை இடம்பெறுவதற்கு இடம் கொடுத்து தான் பதவி விலகியிருந்ததாகவும் ரவி கருணாநாயக்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment