
கொரொனா மரணங்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கள் தவறானது என தெளிவுபடுத்தியுள்ளார் சரத் பொன்சேகா.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இருவர் இத்தாலியிலிருந்து வந்தவர்கள் எனவும் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களையே தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளின் மத்தியில் ஏதோ ஒரு பத்திரிகையில் அச்செய்தியினைப் படித்ததாக அவர் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிசார் தெரிவித்து வந்த நிலையில் பொன்சேகா தன் கருத்தை வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment