நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தையும் வாகனத்தையும் மீள ஒப்படைத்துள்ளார் சஜித் பிரேமதாச.
ஜனாதிபதியின் அதிகாரத்துக்குட்பட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவோடு கலைக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தும் - சாராமலும் இடம்பெற்று வருகின்ற அதேவேளை இரு தரப்பும் போட்டியிடும் சின்னம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டாத நிலையில் இழுபறி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment