
இலங்கையில் கொரோனா பரவி வரும் அபாயத்தின் பின்னணியில் திரையரங்குகளை மறு அறிவித்தல் வரை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு வார காலத்துக்கு பொது மக்கள் ஒன்று கூடும் வகையிலான கூட்டங்களை நடாத்துவதற்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
நான்குக்கு மேற்பட்ட கொரோனா கண்காணிப்பு மையங்கள் இயங்கி வருவதுடன் இதுவரை ஏழு பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment