![](https://i.imgur.com/Iv9yr0A.png?1)
இலங்கையில், சுற்றுலாப்பயண வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவரது குடும்பத்தை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலத்தில் கொரோனா தாக்கத்துக்குள்ளான முதலாவது இலங்கை பிரஜை குறித்த நபர் எனும் நிலையில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment