![](https://i.imgur.com/vqeEfrF.png?1)
ரணில் - சஜித் பிரிவுகளுக்கிடையிலான இழுபறி தொடரும் நிலையில் இரு தரப்பும் தனித்தனியாக வேட்பு மனத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரணில் தலைமையில் கூடிய செயற்குழுக் கூட்டத்தை சஜித் மீண்டும் புறக்கணித்துள்ள நிலையில் தமது தரப்பு வேட்பாளர்களை நியமிப்பதற்கான குழுவொன்றை சஜித் நியமித்துள்ளார். இதேவேளை, ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் செயலாளர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் விரும்பக்கூடிய ஒருவர் நியமிக்கப்படுவார் என ராஜித நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment