சமகி ஜன பலவேகய கூட்டணியின் சின்னம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வரும் நிலையில் அது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லையெனவும் சஜித் தான் கட்சியின் சின்னம் எனவும் விளக்கமளித்துள்ளார் சுஜீவ சேனசிங்க.
கூட்டணியின் மத்திய குழுவின் 60 வீதம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பது தொடர்பில் இழுபறி நிலவுகிறது.
இந்நிலையில், அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கூட்டணியினர் தயாராகி வருகின்ற போதிலும் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment